இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஜிம்னி எஸ்யூவி கார் உற்பத்தியை மாருதி சுசூகி குருகிராம் ஆலையில் துவங்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு ஜூன் முதல் வாரத்தில் கிடைக்க உள்ளது.
ஜிம்னி 5-கதவுகளுக்கான முன்பதிவு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான நாளில் தொடங்கப்பட்டன. சுமார் 25,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
Maruti Jimny
லேடர் பிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஜிம்னி எஸ்யூவி காரில் மாருதி சுசூகியின் 1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். இந்த காரில் கியர்பாக்ஸ் விருப்பங்களில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.
ஆஃப் ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் சுசூகியின் AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
5 கதவுகளை பெற்ற மாருதியின் ஜிம்னி விலை ரூபாய் 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஜூன் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. வரவிருக்கும் 5 கதவு மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளும்.