சமூக வலைத்தளமான ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பெண்ணொருவரை எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் மாற்றம்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலோன் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சமூக வலைத்தளமான ட்விட்டரை வாங்கினார்.
அதன் பின்னர் அதில் பல்வேறு மாறுதல்களை அவர் கொண்டு வந்தது பேசுபொருளானது. எனினும் ட்விட்டர் தொடர்பில் அடுத்தடுத்த அறிவிப்புகளை மஸ்க் வெளியிட்டு வருகிறார்.
Image: AP
புதிய தலைமை செயல் அதிகாரி
இந்த நிலையில் ட்விட்டருக்கு புதிய CEO ஆக பெண்ணொருவரை நியமித்துள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
அவரது வெளியிட்டுள்ள பதிவில், ‘X/Twitterக்கு புதிய CEOவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் ஆறு வாரங்களில் வேலையைத் தொடங்குவார்!
எனது வேலை Exec chair மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தயாரிப்பு, மென்பொருள் மற்றும் Sysops ஆகியவற்றை மேற்பார்வையிடும் பங்குக்கு மாறும்’ என கூறியுள்ளார்.
உயர்ந்த பங்குகள்
எனினும், மஸ்க் தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் பெண் என்பதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எலோன் மஸ்க்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ட்விட்டரின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன, இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியனுக்கு மஸ்க் வாங்கியதில் இருந்து, ட்விட்டர் ஊழியர்களில் 70 சதவீதத்தை குறைத்துள்ளார். இதில் அதன் முழு நிர்வாகக் குழுவும் அடங்கும்.
Image: Justin Sullivan/Getty Images