ராமாயணத்தை படித்தால் தற்கொலை எண்ணம் வராது என கூறிய தமிழிசை சவுந்தரராஜனை, நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ராமாயாணம் தற்போது மறுபடியும் பேசு பொருளாகியுள்ளது. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதியும் இருந்த காலங்களில் ராமாயணம் பேசு பொருளாகியுள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சம்புகன் வேதம் கற்றதால் அவன் தலையை கொய்த ராமன், மனைவியை சந்தேகப்பட்டது, கற்பை நிரூபிக்க தீயில் இறங்க சொன்னது, சாதிய படிநிலை, பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் என்ற பல்வேறு வகைகளில் தமிழகத்தில் ராமாயணம் அப்போது பேசுபொருளானது.
இந்தநிலையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் உருவாக்கிய நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பால் இன்று ராமாயணம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடத்திய இலக்கிய நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் வாசித்த கவிதையால் ராமாயணம் தெற்போது பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. மலக்குழி மரணம் எனும் தலைப்பில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி வாசித்த கவிதை, தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியா எனும் துணைக்கண்டம் முழுவதுமே குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் தான் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்து வருகின்றனர். மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் போதெல்லாம் நச்சு வாயு தாக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். நிலவிற்கு சுற்றுலா செல்ல காத்துக் கொண்டிருக்கும் உலகத்தில், இந்தியாவில் மட்டும் தான் மனிதனே மனித கழிவுகளை அகற்றும் நிலை உள்ளது. அதனால் மனிதன் பிரச்சனையை கடவுள் அனுபவித்தால் எப்படி இருக்கும் என்ற வகையில் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வாசித்தார்.
இந்து கடவுளான ராமர், மலக்குழியை துண்டு பீடியுடன் சுத்தம் செய்தால் எப்படி இருக்கும் எனற வகையில் இந்து ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்த விடுதலை சிகப்பி கவிதை என்ற நபர் கவிதை வாசித்தது பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்து அமைப்புகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து விடுதலை சிகப்பி மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பல்வேறு திராவிட அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.
இந்தநிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ், ‘‘ராமாயணத்தை படித்தால் தற்கொலை எண்ணமே வராது. வாழ்வின் துன்பங்களை கடந்து செல்லும் பக்குவத்தை ராமாயணம் வழங்கும். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை படித்தால் கேட்டால், அவர்கள் மன உறுதி பெறுவார்கள்’’ என்று பேசியது தான் சமூகவலைதளங்களில் ஹாட்டாபிக் ஆக உள்ளது.
ராமரின் தம்பி லட்சுமணன் தன் வாளை வைத்தே வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தம்பியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத ராமர், சரயு நதியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். தன் மனைவியில் கற்பை சந்தேகப்பட்டது, தனது மகன்களான லவா, குசாவை ராமர் ஏற்க மறுத்தது என திராவிட இயக்க ஆதரவாளர்கள் தமிழிசை சவுந்ததராஜனை கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.