தேர்தல் வேட்பாளர்களான அரச உத்தியோகத்தர்கள், தேர்தலில் போட்டியிடும் இடத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமிடத்து கலந்துரையாடி தீர்வு வழங்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தல் சட்டம் ஒன்று இருப்பதால், பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளால் மாத்திரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் சிலருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச ஊழியர்களான தேர்தல் வேட்பாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான பிரச்சினை முதலில் எழுப்பப்பட்டபோது, அந்த பிரச்சினைக்கு முதலில் தீர்வு காணப்பட்டதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.