வாஷிங்டன்:
இதுவரை நாம் கண்டிராத நிலவின் புகைப்படத்தை அமெரிக்காவை சேர்ந்த வானிலை ஆய்வாளர் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை எடுப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏதோ நாமே நிலவில் இருப்பதை போன்ற உணர்வை இந்த புகைப்படம் தருவதாக உள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பிரபஞ்சத்தை பற்றியும், அதில் புதைந்திருக்கும் மர்மங்கள் குறிததும் அறிவதற்கு அனைவருக்குமே ஆர்வம் உண்டு. அதிலும் பூமிக்கு அருகே நிலவு உள்ளிட்ட கோள்கள் எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ள அனைவருமே விரும்புவார்கள். ஆனால் அதுதொடர்பான புகைப்படம் அனைத்தும் செயற்கைக்கோள் மூலமாகவே எடுக்கப்பட்டிருப்பதால் அத்தனை துல்லியமாக இருக்காது.
இந்நிலையில், மக்களின் இந்த மனக்குறையை போக்க வேண்டும் என நினைத்த வானியல் புகைப்படக்கலைஞரும், ஆய்வாளருமான ஆண்ட்ரு மெக்கார்த்தி, பல வாரங்கள் இரவு பகலாக கண்விழித்து நிலவை புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்படம் என்றால் கேமராவால் எடுக்கப்பட்டதில்லை. 2 அதிநவீன தொலைநோக்கிகளை பயன்படுத்தி அவர் எடுத்திருக்கிறார்.
மேலும், நிலவை பகுதி பகுதியாக 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான தனி புகைப்படங்களாக எடுத்து, பின்னர் அவை அனைத்தையும் இணைத்து உண்மையான முழு நிலவை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் ஆண்ட்ரு மெக்கார்த்தி. இந்த புகைப்படத்தையும், அதை ஜூம் செய்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார். இதை பார்க்கும் போது நிலவில் இருக்கும் சிறு பள்ளங்கள், குழிகளை கூட அத்தனை துல்லியமாக பார்க்க முடிகிறது. ஏதோ நமது காலுக்கு அடியில் நிலவு இருப்பதை போன்ற உணர்வை இந்த புகைப்படம் ஏற்படுத்துகிறது.