பிரித்தானியாவில் பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை: டீன் ஏஜ் மகளின் செயலால் கதறி கூச்சலிட்ட தாய்


பிரித்தானியாவில் பிறந்த சில மணி நேரங்களே ஆன தன்னுடைய டீன் ஏஜ் மகளின் ஆண் குழந்தை ஒன்று, குப்பைத் தொட்டி பையில் கிடப்பதை பார்த்த தாய் கதறி கூச்சலிட்டார்.

பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் மறைத்த டீன் ஏஜ் மகள்

பிரித்தானியாவின் பாரிஸ் மாயோ (Paris Mayo) என்ற 15 வயதுடைய டீன் ஏஜ் பெண், ரோஸ்-ஆன்-வை, ஹியர்ஃபோர்ட்ஷையர்(Ross-on-Wye, Herefordshire) உள்ள அவரது குடும்ப வீட்டில் ஸ்டான்லி என்ற ஆண் குழந்தை ஒன்றை 2019 ஆண்டு மார்ச் 23ம் திகதி இரவு பெற்றெடுத்துள்ளார்.

தனக்கு குழந்தை பிறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பாரிஸ் மாயோ, குழந்தையை தாக்கி மூளை காயத்தை ஏற்படுத்தியுள்ளார், இரண்டு மணி நேரங்கள் கழித்தும் குழந்தை இறக்க வில்லை என்பதை உணர்ந்த பாரிஸ் மாயோ, பின் காட்டன் துணியால்  குழந்தையை திணறடிக்க செய்து கொலை செய்துள்ளார்.

Paris Mayo-united kingdomFacebook/The Sun

மேலும் குழந்தையை குப்பை தொட்டி பையில் திணித்து வெளியே தூக்கி எறிய திட்டமிட்ட மாயோ, தனது மூத்த சகோதரருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, வெளியே செல்லும் போது தன்னுடைய அறையில் உள்ள கருப்பு நிற குப்பை பையை வெளியே தூக்கி எறிந்து விடுமாறும், அதில் முழுவதும் நேற்றிரவில் உள்ள தன்னுடைய தேவையற்ற அழுக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பையை பாரிஸ் மாயோவின் தாய் பார்த்து அதில் குழந்தை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார்.

Paris Mayo-united kingdomFacebook/The Sun

அத்துடன் தன் மகள் மாயோவிடம் எங்களிடம் இதை தெரிவித்து இருக்க வேண்டும் என்று தாய் சோகமுடன் தெரிவித்துள்ளார், ஆனால் தான் கருவுற்று இருப்பது தனக்கு தெரியாது என்றும்,  தனக்கு ஏற்பட்ட வலியை முதலில் மாதவிடாய் வலி என்று கருதி வெந்நீரில் உடலை வைத்துக் கொண்ட போது, திடீரென குழந்தை பிறந்தாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தாய் பிறந்த குழந்தையை குப்பை என்றும் அதை தூக்கி வெளியே ஏறியவும் சொல்லிவிடுவார் என்று நம்பியதாக பின்னர் நீதிமன்றத்தில் பாரிஸ் மாயோ தெரிவித்துள்ளார்.

Paris Mayo-united kingdomFacebook/The Sun

தொடரும் விசாரணை

 
இதனை தொடர்ந்து அவசர அழைப்புகள் மற்றும் மருத்துவ சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர், இதையடுத்து மருத்துவ குழு குழந்தையை பரிசோதித்த போது குழந்தை இறந்து உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், வெளியான உடற்கூறு ஆய்வில் குழந்தை தாக்கப்பட்டு, பின் காட்டன் துணியால் மூச்சு திணறடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Paris Mayo-united kingdomFacebook/The Sun

கைது செய்யப்பட்ட டீன் ஏஜ் பெண் குழந்தை பிறக்கும் போதே மூச்சு இன்றியும், எந்த அசைவும் இல்லாமலும் பிறந்ததாக நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரித்தானியாவில் அரங்கேறி உள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.