மதம் மாறுபவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்திகளை சந்தித்து பேசிய அவர், கொஞ்சம் கொஞ்சமாக நாடார் சமுதாயத்தின் பெயரிலேயே கிறிஸ்தவர்கள் நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து மற்றும் சலுகைகளை கிறிஸ்துவ நாடார் என்ற சாதி சான்றிதழை வைத்துக்கொண்டு இந்து நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பறித்து வருகின்றனர்.
மேலும், கொஞ்சம் கொஞ்சமாக நாடார்கள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர். எனவே மதம் மாறி செல்பவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கூடாது. இதுகுறித்து விரைவில் நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.
மேலும், இன்று 234 தொகுதிகளிலும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரல் பதிவு குறித்து உண்மை தன்மை கண்டறிந்து அதனை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நீர்நிலைகள் இயற்கை வள அழிப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படு மோசமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் ஹலால் முத்திரை ரத்து செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.