கோவை கட்டுமானம் முடிந்த பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி தர வேண்டிஉள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் கூறி உள்ளது. நேற்று கோவையில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்னும் கட்டுமான சங்கத்தின் தேசிய தலைவர் நரசிம்ம ரெட்டி, மாநில தலைவர் ஐயப்பன், ஒருங்கிணைப்பு தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டல துணைத் தலைவர் ஜான் பால் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், ”தற்போது கட்டுமான திட்டங்களுக்கு வனத்துறை, சுற்றுச்சூழல் துறை […]