திருகோணமலை – நெல்சன் திரையங்கிற்கு முன்பாக பௌத்தமயமாக்கல் தடுத்து
நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று (12.05.2023) காலை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்
செயற்றிட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையிலே இவ்வாறு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில் ஒவ்வொரு
பகுதிக்கும் மாணவர்கள் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்து வருகை தந்த
புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், போராட்டம் தொடர்பில் ஊடகங்களை புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் புலனாய்வாளர்கள் தெரிவித்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துமீறிய செயல்
இதன்போது, போராட்டக்களத்தில் இருந்து மாணவர்கள் எழுந்து, “அரசின் கைக்கூலியே வெளியேறு“ என கோசமிட்ட நிலையில், அங்கு முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில் அவ்விடத்தை விட்டு புலனாய்வாளர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
மேலும், தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான
நினைவேந்தல்கள் மற்றும் போராட்டங்கள் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |