மோசடி கும்பலால் திருடப்பட்ட பணத்தை திருப்பி வழங்க பேடிஎம்-க்கு உத்தரவிடும்படி ஆர்பிஐ-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மருத்துவ மேற்படிப்பு மாணவி பவித்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது
பணம் காணாமல் போனதால் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என வங்கி தரப்பு வாதம்.அதே போல் வாடிக்கையாளருக்கு தெரியாமல், அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமல் பண பரிவர்த்தனை நடைபெறாது என பேடிஎம் தரப்பு வாதிட்டது.
இதை கேட்ட நீதிபதிகள் வங்கி நிர்வாகமும், பேடிஎம் நிறுவனமும் மாறி மாறி பழி போடுவது ஏற்க கூடியது அல்ல. வங்கி கணக்கை முடக்கி திருடப்பட்ட ரூ.3 லட்சத்தை பேடிஎம் வழங்க வேண்டும். அதுவும் 2 வாரங்களில் மாணவிக்கு பணத்தை வழங்க பேடிஎம்-க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது
இந்த உத்தரவு மூலம் பலம் திருடப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் நமக்கு பணத்தை திருப்பி தர வேண்டும்