பரேய்லி, உத்தர பிரதேசத்தில் மெத்தை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு தொழிலாளர்கள் உடல் கருகி பலியான சம் பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யின் பரித்பூர் நகரில் மெத்தைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
இங்கு, நேற்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி, மளமளவென எரிய ஆரம்பித்தது. இதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தும் இந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; மேலும் நான்கு பேர் பயங்கர காயங்களுடன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்து தொடர்பாக தலைமை தீயணைப்புத்துறை அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை தர, பரேய்லி கலெக்டர் சிவகாந்த் திவேதி உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement