புதுடில்லி : ‘அக்னி வீரர்களுக்கு ரயில்வேயின் பல்வேறு பணியிடங்களில், 15 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும்’ என, ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்காக, அக்னிபத் என்ற திட்டத்தை நம் ராணுவம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் வீரர்கள், அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர்.
இவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருப்பர். தேர்வு செய்யப்படுவோரில், 25 சதவீதம் பேர் மட்டும் ராணுவத்தில் நிரந்தர பணியாற்ற தேர்வு செய்யப்படுவர்.
ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகள், தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரயில்வே துறையும் இதுபோன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வேயில் அதிகாரிகள் அல்லாத பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, அக்னிவீரர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். ரயில்வே பாதுகாப்பு படையிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். மேலும், உடற்தகுதி சோதனை, வயது வரம்பு ஆகியவற்றிலும் அக்னி வீரர்களுக்கு சலுகை அளிக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement