திருவனந்தபுரம், கேரளாவில் டாக்டர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி, அம்மாநில அரசு டாக்டர்கள் சங்கம் அரசை வலியுறுத்தி உள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சந்தீப் என்ற கைதி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டபோது, அங்கு இருந்த வந்தனா, 23,என்ற டாக்டரை கத்தரிக்கோலால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த வந்தனா உயிரிழந்தார்.
இந்த விவகாரம் கேரளாவில் பணியாற்றும் டாக்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில், மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:
மாநில முழுதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை டாக்டர்களின் பாதுகாப்புக்காக பணியமர்த்த வேண்டும்.
அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுகளில், ஆயுதம் தாங்கிய போலீசாரை பாதுகாப்புக்காக பணியமர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டாக்டர் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement