புதுடில்லி: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிப்.,15 முதல் ஏப்., 5 வரை சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 16.9 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு எப்போது வரும் என மாணவர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், http://results.cbse.nic.in/, cbseresults.nic.in, digilocker.gov.in என்ற இணையதளங்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் நாடு முழுவதும் 87.33 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆனால், முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற மாணவர்கள் பற்றிய விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement