புதுடில்லி, இந்திய கடற்படையின் இரு போர்க் கப்பல்கள், துறைமுக அழைப்பின் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா நாட்டின் சீனக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
கம்போடிய பகுதியான தாய்லாந்து வளைகுடாவில், சீன கடற்படை தளம் கட்டப்பட்டு வருவதாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், இந்த துறைமுக விழா நடந்துள்ளது.
தற்போது, இந்திய கடற்படை கப்பல்களான, ஐ.என்.எஸ்., சத்புரா மற்றும் ஐ.என்.எஸ்., தில்லி ஆகிய இரு நவீன கப்பல்களும், மே 14 வரை இந்த கம்போடிய துறைமுகத்தில் நிறுத்தப்படும் என இந்திய கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இரு கடற்படை வீரர்களும், தொழில்முறை தொடர்புகள், கப்பல்களை பார்வையிடுவது மற்றும் விளையாட்டு பரிமாற்றங்கள் ஆகியவையில் ஈடுபடுவர். இனி, இரு கடற்படைகளும் ஒன்றிணைந்து இயங்கும்.
இந்திய கப்பல்களின் வருகை, இரு நாட்டு கடற்படைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மட்டுமின்றி, இரு நாட்டு நட்புறவையும் பலப்படுத்தும்.
இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement