மாஸ்கோ : ரஷியாவில் பரவிய காட்டுத்தீயில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ, ரஷியா, சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதனால் ரஷியாவின் குர்கான், சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்களில் தீப்பிடித்தன.
இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான எக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தீ பரவிய இடங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பலியானோரின் எண்ணிக்கை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement