கர்நாடக மாநிலத்தின் 224 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மங்களூருவின் மூடுஷெட்டே என்ற பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் இரு கட்சியினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஒரு காவலர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் மங்களூரு கமிஷனரேட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The Kerala Story: அப்பட்டமான உண்மையை எடுத்து சொல்லியிருக்காங்க… கேரளா ஸ்டோரி படம் குறித்து ஹெச் ராஜா!
மங்களூரூ காவல் எல்லைக்கு உட்பட்ட பாஜ்பே, காவூர், மூட்பித்ரி, சூரத்கல் மற்றும் மங்களூரு ஊரக காவல் நிலைய எல்லைகள் இந்த 144 தடை உத்தரவு இருக்கும் என்றும் இந்த தடை உத்தரவு மே 14 ஆம் தேதி காலை 6 மணி வரை நிலுவையில் இருக்கும் என்றும் மங்களூரு ஊரக காவல் நிலைய எல்லை சட்டம் ஒழுங்கு டிசிபி அன்ஷு குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அங்கு ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறிதுயுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அமைக்கவில்லை. இதனிடையே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என கூறப்படுகிறது.
Sneha Prasanna: சுத்தி போடுங்க மேடம்… சினேகா பிரசன்னாவின் ரொமான்டிக் க்ளிக்ஸ்!
மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிதான் ஆட்சி அமைக்கும் கட்சியை தேர்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த சில ஓய்வே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் குமாரசாமி ஓய்வெடுப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.