சென்னை: Leo (லியோ) லியோ படக்குழு ஒரு விஷயத்தை ரொம்பவே எதிர்பார்த்து இப்போது ஏமாற்றமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், மாத்யூ தாமஸ், மிஷ்கின், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் காஷ்மீரில் இரண்டு மாதங்கள் நடந்தது. கடும் குளிரிலும் வெப்பம் குறையாமல் லோகேஷ் கனகராஜ் & டீம் வேலை பார்த்தது.
சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு சில நாள்கள் ஷூட்டிங் நடந்தது. அதனையடுத்து பையனூரில் நடந்த ஷூட்டிங் இப்போது மீண்டும் செட்டுக்குள் நடக்கிறது. ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் போடப்பட்ட செட்டில் மன்சூர் அலிகான், அர்ஜுன், விஜய் உள்ளிட்டோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுவருவதாக படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்திருக்கிறது.
அர்ஜுன் கேரக்டர் என்ன?; இந்தச் சூழலில் படத்தில் அர்ஜுனின் கேரக்டர் என்னவாக இருக்கும் என பல காலம் கேள்வி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதுகுறித்த தகவலும் சமீபத்தில் வெளியானது. அதாவது, விஜய்ய்க்கு நண்பனாக தோன்றும் அர்ஜுன் அதன் பிறகு அவருக்கு துரோகம் செய்வதுபோல் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை யாருமே போடாத மேக் அப் அர்ஜுனுக்கு போடப்படவிருப்பதாகவும் கூறப்பட்டது.
மேலும், ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் விஜய் வாழ்வதும், அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் லியோ படத்தின் ஒன்லைன் என்ற தகவலும் வெள்யானது.
பாடல் ஷூட்டிங்: இதற்கிடையே தனது படங்களில் அதிகம் பாடல்களை வைக்காத லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தில் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருக்கிறார். அதன்படி, படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக மற்ற மாநிலங்களில் இருந்து 2000 டான்ஸர்களை வரவைத்து பிரமாண்டமாக பாடலை படமாக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக மற்ற மாநில திரைத்துறையில் நடன கலைஞர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்தது.
ஏமாற்றத்தில் படக்குழு: ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அவ்வளவு டான்ஸர்கள் கிடைக்காததால் படக்குழு ஏமாற்றமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளர்கள் பலர் நடன பள்ளி வைத்திருக்கின்றனர். எனவே அங்கு நடனம் கற்றுக்கொள்ள வருபவர்களில் சிறந்த டான்ஸர்களை அடையாளம் காணும் பணியில் தற்போது இறங்கியிருக்கிறாராம்.
பாடல் ரிகர்சல்: அந்தத் தேடல் படலம் முடிந்த பிறகு அவர்களை வைத்து பாடலை ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். மேலும் இந்தப் பாடலுக்கான ஒத்திகை விரைவில் தொடங்கி ஒரு வாரம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைக்கவிருக்கிறார். இந்தப் பாடலுக்கான ஷூட்டிங்கும் ஆதித்ய ராம் ஸ்டூடியோவில்தான் நடக்கவிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறியிருக்கின்றனர்.