திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலாகா மாற்றம்திமுக அமைச்சரவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். சமீபத்தில் பிடிஆர் பழனிவேல் பேசியதாக போன் ஆடியோ ஒன்றை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. அதில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
பிடிஆர் ஆடியோ
ஆனால் இந்த ஆடியோ தன்னுடையது இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார் அமைச்சர் பிடிஆர்பழனிவேல் தியாகராஜன். மேலும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இரண்டு முறை விளக்கமும் கொடுத்திருந்தார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் விளக்கமளித்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு விளம்பரம் தேடி தர விரும்பவில்லை என்றார்.
அமைச்சரவையில் மாற்றம்இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் நேற்று முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினரான டிஆர் பாலுவின் மகனும் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா பதவி ஏற்றார். அவர் தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை இலாகா மாற்றப்பட்டு தொழில்துறை அமைச்சராக தென்னம் தங்கரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் கருத்துபிடிஆர் பழனிவேல் தியாராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டது, ஆடியோ விவகாரம் உண்மைதான் என்பதை நிரூப்பிதாக தெரிவித்தன. இந்நிலையில் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிடிஆர் தியாகராஜன் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
கஸ்டடியில் எடுத்தால்30, 000 கோடி விஷயத்தை பிடிஆர் பேசியதில் இருந்து மத்திய அரசு விளக்கெண்ணெய் வைத்து பார்க்கிறது என்றும் பிடிஆர் உட்பட 3 பேரையும் கஸ்டடியில் எடுத்தால் பிடிஆர் எல்லாத்தையும் சொல்லிவிடுவார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் பிடிஆர் தங்கள் கட்சிக்கு வர வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் ஜெயக்குமார் கூறினார்.
அவசியம் இல்லைஅப்போது பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசரை இழுக்க திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, யாருக்கும் வலை வீச வேண்டிய அவசியம், ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றார் ஜெயக்குமார். மேலும் தங்களின் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பி கட்சியில் இணைவார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிமுகவில் இணைய வாய்ப்பு அதிகம் என ஜெயக்குமார் கூறியிருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.