தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பொழுதே மூத்தா ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தமிழ்நாடு முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக ஜெகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் வரலாற்றில் முதன்முறையாக பெண் ஐஏஎஸ் அதிகாரி உள்துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அறநிலை துறை முதன்மைச் செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புள்ளியியல் துறை இயக்குனராக கணேசன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டு துறை செயலாளராக நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துறை செயலாளராக இருந்த கே.கோபால் தமிழ்நாடு கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றத்திற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.