கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு உழைத்த பாஜக.. ராகுல் காந்தியை தொட்டதால் வந்த வினை.. பரபர ரிப்போர்ட்

பெங்களூர்:
கர்நாடகாவில் பாஜகவை கிட்டத்தட்ட வாஷ் அவுட் செய்யும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளியதோடு மட்டுமல்லாமல், தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், பாஜக இப்படி ஒரு மோசமான தோல்வியை நோக்கி செல்வதற்கு அக்கட்சியே தான் காரணம் என்றும், ராகுல் காந்தியை தேவையில்லாமல் தொட்டது தான் இதற்கான பிள்ளயைார் சுழி எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இதில் தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்தாலும் அதன் பிறகு நிலைமை தலைகீழானது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் அடித்து துவம்சம் செய்து லீடிங்கில் இருந்து வருகிறது.

இப்போதைய சூழலில், 118 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜகவோ வெறும் 65 தொகுதிகளில்தான் முன்னிலை வகிக்கிறது. எப்படி பார்த்தாலும் இனி காங்கிரஸை பாஜகவால் வெற்றி பெற முடியாது என்பது தெளிவாகிவிட்டது.

ராகுல் காந்தியின் பங்கு:
எப்படியும் மேஜிக் நம்பரான 113-ஐயும் காங்கிரஸ் பெற்றுவிடும் என்றே தெரிகிறது. இதனால் தென்னிந்தியாவில் பாஜகவின் சகாப்தம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸின் இந்த பெரும் வெற்றிக்கு ராகுல் காந்தியின் பங்கு அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, ராகுல் காந்தியை தேவையில்லாமல் சீண்டியதும் பாஜகவுக்கு எதிராக திரும்பியதாக கூறப்படுகிறது.

பாரத் ஜோடோ யாத்திரையின் தாக்கம்:
ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. அனைத்து விதத்திலும் ஒடுக்கப்பட்ட ஒரு தலைவன், கடைசியாக தனது மக்களை பார்க்க வருவது போலதான் பாரத் ஜோடோ யாத்திரையை மக்கள் பார்த்தனர். இதை பாஜக கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருக்கலாம். ஆனால், இந்த நடைப்பயணத்தை தடை செய்வதற்காக பாஜக செய்த வேலைகளை மக்கள் ரசிக்கவில்லை. இது, ராகுல் காந்தி மீது ஒருவித கனிவை கர்நாடகா மக்களுக்கு ஏற்படுத்தியது.

ராகுலை சீண்டிய பாஜக:
அதேபோல, ஒரு சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கூறி ராகுல் காந்தி மீது பாஜக வழக்கு தொடுத்தது. இதில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது இதை காரணமாக வைத்து, ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட உடனேயே ராகுல் காந்தி அவரது அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவை அனைத்தும் ராகுல் காந்தி மீதான பரிதாப அலையை மேலும் அதிகரித்தது. அதேபோல, பாஜகவுக்கு எதிரான மனநிலையையும் கர்நாடகா மக்கள் மத்தியில் உருவாக்கியது. இவ்வாறு பாஜக செய்த எதிர் அரசியல் அக்கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தோல்விக்காக உழைத்த பாஜக:
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பாஜக ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் பெரிதாக செய்யப்படவில்லை. வட மாநிலங்களை போல மதத்தை வைத்து அரசியல் செய்வதிலேயே முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரவாளர்கள் ஆர்வம் காட்டினர். அத்துடன், பாஜக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வந்தன. இதனால் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மேலும், பசவராஜ் பொம்மையால் எடியூரப்பா ஓரங்கப்பட்டுவது அவரது சமூகத்தைச் சேர்ந்த லிங்காயத்துகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இவை எல்லாம் ஒன்றாக சேர்ந்துதான், பாஜகவை ஆட்சி அரியணையில் இருந்து தூக்கி எறிந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.