கர்நாடக தேர்தல்: மீண்டும் பாஜக ஆட்சியா? முன்னிலை விவரங்கள் சொல்வது என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கின. தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முன்னதாக தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகிய போது தொங்கு சட்டசபை அமைய அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டது.

அதேசமயம் பாஜகவை விட
காங்கிரஸ்
கட்சி இருபது தொகுதிகளுக்கும் மேல் அதிகம் பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

உதயச்சந்திரன் இடத்தில் புதிய அதிகாரி? கோட்டையில் நடக்கும் மிகப் பெரிய மாற்றம்!

ஆனால் தற்போது வெளியாகும் முதற்கட்ட முன்னிலை விவரங்களில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தபால் வாக்குகளில் பாஜக 67 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும் மஜக 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.