கர்நாடக மக்கள் எழுதிய தீர்ப்பு என்னவென்று தெரிந்து கொள்ளும் நாள் (மே 13) வந்துவிட்டது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள், அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என எண்ணிக்கை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். எக்ஸிட் போல் முடிவுகள் ஒரு நிலையான விஷயத்தை வெளிப்படுத்தவில்லை.
காங்கிரஸ்
வெற்றி பெறும், தொங்கு சட்டமன்றம் அமையும் என இரண்டு விதமான கணக்குகளை அளித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் பாஜகவின் கனவு தான் டமால் என்பது போல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 50:50 சான்ஸ் தான் எனத் தெரிகிறது. எப்படியும் இன்று பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இந்த தேர்தல் பலரது அரசியல் எதிர்காலத்திற்கு அவசியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் மூன்று பேரை மட்டும் இங்கே அலசி பார்க்கலாம்.
சித்தராமையா
ஹெச்.டி.குமாரசாமி
ஜெகதீஷ் ஷெட்டர்