கல்யாண கெட்டப்பில் வைரலாகும் ஜூலி? அட இதுதான் விஷயமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் கெட்ட பெயரை வாங்கியிருந்த ஜூலி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அனைவருக்கும் பிடித்தமான நபராக மாறினார். இப்போது தான் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பாஸிட்டிவான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில், சக நடிகர் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக திருமணம் கோலத்தில் ஜூலி நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து ஜூலி திருமணம் செய்துகொண்டதாக பல்வேறு வதந்திகளும் பரவியது. ஆனால், உண்மையில் அது நிஜ திருமணம் அல்ல. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஜூலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியல் கதைப்படி ஜூலிக்கு திருமணம் நடக்கிறது. அப்போது ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.