சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் சிலர், உண்மையான பிரான்ஸ் பாஸ்போர்ட்டுடன் பயணிக்க உதவும் மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் பாஸ்போர்ட்டுடன் சிக்கிய வெளிநாட்டவர்
கடந்த நவம்பர் மாதம், மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் வந்த வந்த ஒருவரை பாரீஸ் விமான நிலையத்தில் எல்லை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, அவரிடமிருந்த பிரான்ஸ் பாஸ்போர்ட் அவருடையது அல்ல என்பது தெரியவந்தது.
விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்
அந்த நபரிடம் விசாரிக்கும்போது, அவர் உண்மையான பிரான்ஸ் பாஸ்போர்ட் ஒன்றை வாடகைக்கு பெற்று பயணித்தது தெரியவந்தது.
AFP
அதாவது, அவர், 7,000 யூரோக்கள் கொடுத்து பிரான்ஸ் நாட்டவர் ஒருவருடைய பாஸ்போர்ட் ஒன்றின் உதவியுடன் மாலியிலிருந்து பிரான்சுக்கு பயணம் செய்துள்ளார்.
மேலதிக விசாரணையில், பாரீஸை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கூட்டம், புலம்பெயர்தல் பின்னணிகொண்ட பிரான்ஸ் குடிமக்களுக்கு பணம் கொடுத்து, அவர்களுடைய பாஸ்போர்ட்களை பெற்று, அவற்றின் உதவியுடன், இந்த மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 250 பேர் இந்த மோசடிக்கு துணை போயிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்களும் நான்கு பெண்களும் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
AFP