பால் மா விலை குறைப்பு குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த விடயம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உறுதியான முடிவு இல்லை
இது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்கள் மேலும் கூறுகையில்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை.
எதிர்வரும் திங்கட்கிழமை (15.05.2023) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.