
மே 26ல் திரைக்கு வரும் கழுவேத்தி மூர்க்கன்
அருள்நிதி நடிப்பில் கடந்தமாதம் ‛திருவின் குரல்' படம் வெளியானது. அடுத்து இந்த மாதம் அவர் நடித்துள்ள மற்றொரு படமான கழுவேத்தி மூர்க்கன் வெளியாக உள்ளது. அருள்நிதிக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட நாயகி துஷாரா விஜயன் நடித்துள்ளார். கவுதம ராஜ் என்பவர் இயக்க, டி. இமான் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகளை துவங்கி உள்ளனர். இப்படம் வருகிற மே மாதம் 26ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தையும் இந்நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.