சென்னை : சிம்பு பட நடிகை மோகன்லால் மகனை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ் மற்று மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
மலையான நடிகையான இவர் 2019 ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
மாநாடு படத்தில் : ஹீரோ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் யாரும் எடுக்காத வித்தியாசமான டைம் லூப் கதையை எடுத்திருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து சிம்புக்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது
கல்யாணி பிரியதர்ஷின் : திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணிக்கும், மோகன்லாலின் மகன் பிரணவ்க்கும் உள்ள நட்பு மாலிவுட் வட்டாரத்தில் எப்போதும் பேசப்பட்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் இணைந்து இருக்கும் செல்ஃபியை கல்யாணி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதில் இருந்து இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

தேவையற்ற சர்ச்சை : பிரணவ் மற்றும் கல்யாணியின் காதல் விவகாரம் சோஷியல் மீடியாவில் பேசு பொருளானதை அடுத்து, மோகன்லாலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மோகன்லால், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும். இருவரும், சென்னையில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் பிரியதர்ஷன் எனது சிறந்த நண்பர்கள்,அதே போல என் மனைவி சுசித்ரா, கல்யாணியின் அம்மா லிஸ்ஸி ஆகியோரும் நல்ல நண்பர்கள் என்றார்.

மீண்டும் காதல் விவகாரம் : அண்மையில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரணவ் மோகன்லால் இருவரும் காஷ்மீர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அங்கு எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, பிரணவ் மோகன்லால் கல்யாணி பிரியதர்ஷன் இருவரின் காதல் விவகாரம் மீண்டும் பேசு பொருளாகி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து மரைக்காயர் அரபிகடலின் சிம்ஹம் படத்திலும், வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய ‘ஹிருதயம்’படத்திலும் இணைந்து நடித்திருந்தனர்.
