வங்கக் கடலில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மோக்கா புயலை ஒட்டி, வங்கதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மியான்மரின் சித்வே – வங்கதேசத்தின் காஸ் பஜார் பகுதிகளுக்கு இடையே மோக்கா புயல் ஞாயிறு காலை கரையைக் கடக்கும்போது, மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் காஸ் பஜார் பகுதியில் கடுமையான சேதம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக காஸ் பஜார் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.