கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் தனி பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களை கைப்பற்றியுள்ள
காங்கிரஸ்
ஆட்சி அமைக்கவுள்ளது. ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நடந்த இந்த கடுமையான பலப்பரீட்சையில் பாஜகவை அடித்து வீழ்த்தியுள்ளது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை கட்சி நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியின் உழைப்புக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளதாக கூறினார்.
தண்ணி கொடுத்தது ஒரு குத்தமா? பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய ஆமை!
சட்டமன்ற குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்த வேட்பாளர்களையும் பெங்களூருக்கு அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் இருந்த பாஜக அரசு எந்தளவுக்கு திறமையற்றதாக இருந்தது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கூறிய மல்லிகார்ஜுன கார்கே, வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் கட்சி மக்களுடன்தான் இருக்க வேண்டும் என கூறினார்.
அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்த மல்லிகார்ஜுன கார்கே, பாஜக நிறுத்தி வைத்துள்ள நல்லத்திட்டங்களையும் செயல்படுத்துவோம் என்றார். ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது என்று கூறிய மல்லிகார்ஜுன கார்கே ஊழல் அரசுக்கு மக்கள் சரியான அடி கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் 20233: காங்கிரஸுக்கு கை கொடுத்த ‘40% கமிஷன் சர்க்கார்’ … பாஜகவை வீழ்த்திய ஊழல்!
மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் திரண்டு வந்து தங்களின் பலத்தை காட்டிய போதும் மக்கள் பாஜகவை தூக்கி எறிந்து உள்ளனர் என்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கட்சி மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூருவுக்கு வந்து தேர்வு செய்வார்கள் என்றார்.