வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு


வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள “மொக்கா ” புயல் தற்போது தீவிர புயலாக உருவாகியுள்ளது.

இந்த சூறாவளி தற்போது பங்களாதேஷை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு | Mogha Cyclone Warrning

கடல் அலை வேகம்

வங்கக் கடலில் 2023-ம் ஆண்டு வீசிய முதல் புயல் மொக்கா வங்காளதேசத்தின் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் பகுதிகளுக்கு 14 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நுழையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள மொக்கா சூறாவளி! கடலோரப்பகுதிகளின் எச்சரிக்கை நிலை நீடிப்பு | Mogha Cyclone Warrning

இவை மணிக்கு 150 – 175 கிமீ வேகத்தில் வீசும் எனவும், வங்கதேசத்தின் கடலோரப் பகுதியில் கடல் அலைகள் 5 முதல் 6 அடி உயரம் வரை எழும்பக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளியின் தாக்கம் காரணமாக தீவின் பல பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து பதிவாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.