மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 113 இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில்
காங்கிரஸ்
137 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக-65, ம.ஜ.த-19, மற்றவை-03 இடங்களிலும் வெற்றி பெரும் நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு படுதோல்வி மட்டுமல்லாமல் 14 அமைச்சர்கள் ஏறக்குறைய தோல்வி அடையும் தருவாயில் இருப்பது பகீரை கிளப்பியுள்ளது. தேசிய ஊடகங்களில் வெளியான தகவல்கள் படி கீழக்கண்ட பாஜக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
தோல்வி முகத்தில் உள்ள கர்நாடக பாஜக அமைச்சர்கள்
1. கிருஷ்ணராஜ் பேட்: கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர்
2. ஹிரேகேரு தொகுதி: பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர்
3. சிக்கநாயகனஹள்ளி தொகுதி: ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர்
4. சிர்சி தொகுதி: சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி
5. திப்தூர் தொகுதி: பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்
6. நாவல்குண்ட் தொகுதி: சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர்
7. முத்தோள் தொகுதி: கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர்
8. சன்னபட்னா தொகுதி: ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர்,
9. பெல்லாரி ஊரகம்: பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர்,
10. பீளகி தொகுதி: முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர்
11. வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் – 2 இடங்களிலும் தோல்வி.
12. சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி: டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர்
13. எல்புர்கா தொகுதி : ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர்
14. ஒசகோட்டை தொகுதி: எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர்
கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.