சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) புகழின் உச்சிக்கு சென்றாலும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எளிமையால் மாரி செல்வராஜை ஆச்சரியப்படுத்திய தகவல் தெரியவந்திருக்கிறது.
ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு அவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் தனது திறமையை நிரூபித்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஹாலிவுட் கதவுகள் திறந்தன. அப்படி அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான படங்கள்: ஹாலிவுட்டில் அவர் இசையமைத்தாலும் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில் அவர் இசையமைப்பில் பத்து தல, பொன்னிய்ன் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியாகின. படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ரஹ்மானின் இசை அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதேபோல் மணிரத்னம் – கமல் ஹாசன் இணையவிருக்கும் படத்துக்கும் ரஹ்மான் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் ஏ.ஆர்.ரஹ்மான்: அடுத்ததாக அவர் இசையமைப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் உருவாகியிருக்கிறது. ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சாதியத்தை கையில் எடுத்து அதை மிக பக்குவமாக காட்சிப்படுத்தி விருந்து படைத்தவர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக இயக்கிய கர்ணன் கலவையான விமர்சனத்தை பெற இப்போது மாமன்னனை எடுத்திருக்கிறார்.
மாரி செல்வராஜை ஆச்சரியப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்: இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜை தனது எளிமை மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சரியப்படுத்தியதாக தகவல் வெளியானது. அதாவது, மாரி செல்வராஜிடம் ஏ.ஆர்.ரஹ்மான், நான் படத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் அதற்கு ஏற்றவாறு என்னால் இசையமைக்க முடியும் என கூறியிருக்கிறார். அதற்கு மாரி செல்வராஜ், வேறு ஒரு படப்பிடிப்புக்காக திருநெல்வேலியில் இருக்கிறேன். சென்னையில் பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என்றிருக்கிறார்.
நோ சொன்ன ரஹ்மான்: அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானோ இல்லை இந்தப் படத்தை உங்களுடந்தான் நான் பார்க்க வேண்டும். என ஸ்ட்ரிக்ட்டாக கூறீவிட்டாராம். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானை திருநெல்வேலிக்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து ஒன்றாக மாமன்னன் படத்தை பார்த்தனராம். அன்றைய தினம் முழுவதும் மாரி செல்வராஜுடன் இருந்து படம் குறித்து நிறைய விஷயங்களை பேசிவிட்டு மறுநாள் சென்னைக்கு கிளம்பியிருக்கிறர் ரஹ்மான். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் புகழின் உச்சிக்கு சென்றாலும் எவ்வளவு எளிமையாக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்திருக்கிறார் என புகழ்ந்துவருகின்றனர்.
மாமன்னன் ரிலீஸ்: மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரொவாக நடித்திருக்கிறார் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுகக்ப்பட்டுள்ளது. இவர்கள் தவிர உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படமானது விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாடல் ரெக்கார்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் சமீபத்தில் ட்ரெண்டானது.