மும்பை,”முதல்வர் பதவியை ராஜினாமா செய்து,மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா,” என, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்து உள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா,பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிடமிருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிய ஏக்நாத் ஷிண்டே,கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் தன் பக்கம்இழுத்துள்ளார்.
இந்நிலையில், சிவசேனா உட்கட்சி விவகாரம் குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இதில், ‘சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பாகவே, உத்தவ் தாக்கரேபதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவரை மீண்டும்முதல்வராக்க முடியாது.
‘ஆனாலும், உட்கட்சி பிரச்னையை தீர்ப்பதற்காக, சட்டசபையில் பெரும்பான்மையைநிரூபிக்கும்படி மஹாராஷ்டிரா கவர்னர்,உத்தவ் தாக்கரேவுக்குஉத்தரவிட்டது தவறு’ என, தீர்ப்பளித்தது.
மேலும், ‘ஏக்நாத் ஷிண்டேஉள்ளிட்ட அவரது ஆதரவாளர்களான, 16 எம்.எல்.ஏ.,க் களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான விவகாரத்தில், சபாநாயகர் குறித்த காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும்’ என்றும் நீதிமன்றம்உத்தரவிட்டது.
இது குறித்து உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.
இனி, தேர்தல் வாயிலாகவே பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் வந்ததும்,எம்.எல்.ஏ., தகுதி நீக்க விஷயத்தில் விரைந்து முடிந்து எடுப்பார் என நம்புகிறோம்.இல்லையெனில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்.தார்மீக அடிப்படையில் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக உள்ளேன்.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தன் பதவியை ராஜினாமா செய்து,மீண்டும் தேர்தலைசந்திக்க தயாரா?இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்