சிட்னி :ஆஸ்திரேலியாவில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் படத்தை ஆஸ்திரேலியா போலீஸ் வெளியிட்டுள்ளது.
பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கு தல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், நம் பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்களையும் எழுதி வைத்தனர்.
மேலும், கோவில் வாயிலில் காலிஸ்தான் அமைப்பின் கொடியும் தொங்கவிடப்பட்டு இருந்தது.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டில் மட்டும், இந்த கோவில் உட்பட ஐந்து கோவில்கள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
முன்னதாக, 5ம் தேதி அதிகாலையில் கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுஇருந்த காரின் படத்தை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது போலீசார் மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில், கோவிலை சேதப்படுத்திய குற்றவாளியின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நபர் கருப்பு நிற உடை மற்றும் தொப்பி அணிந்துள்ளார்.
முகத்தை துணியால் மறைத்தபடி இருக்கிறார். இந்நிலையில், இந்த குற்றவாளி குறித்து தெரியவந்தால் தங்களை தொடர்பு கொள்ள, போலீசார் பொது மக்களை அறிவுறுத்திஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement