Jio Cinema Plans: 999 ரூபாய்க்கு உலகப்புகழ் ஹாலிவுட் நிகழ்ச்சிகள் பார்க்கலாம்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் Jio Cinema அதன் பிரீமியம் சந்தா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்களுக்கு அதிகப்படியான நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே ஜியோ சினிமா மூலம் FIFA World cup மற்றும் IPL 2023 ஆகியவற்றை ஒளிபரப்பியது. இப்போது பிரபல HBO நிகழ்ச்சிகளாக இருக்கும் last of us, house of dragons போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து ரசிக்கலாம்.

Jio Cinema premium

இதில் பிரீமியம் ஹாலிவுட் நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும் ஒரு சந்தா திட்டம். சமீபத்தில் Disney+ Hotstar உடன் இருந்த ஒப்பந்தத்தில் இருந்து HBO நிறுவனம் வெளியேறி இப்போது Jio Cinema உடன் இணைந்து HBO நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை பெற நேரடியாக Jio Cinema Website சென்று 999 ரூபாய் வருட திட்டத்தை பெறமுடியும். இதை எந்த ஒரு கருவியில் காணமுடியும். இதில் மிகவும் தரம் வாய்ந்த வீடியோ மற்றும் ஆடியோ தரம் கிடைக்கும்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நமது Jio cinema ID பகிர்ந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரே நேரத்தில் பல இடங்களில் Jio Cinema app பயன்படுத்தலாம். இதேபோல மாதம் பயன்படுத்தும் சந்தா திட்டங்களையும் விரைவில் அறிவிக்க உள்ளது.

Jio VR Headset இந்தியாவில் வெளியீடு! ஐபில் 2023 போட்டிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம்!

Jio Cinemaவில் இருக்கும் HBO நிகழ்ச்சிகள்

HBO நிறுவனத்தின் உரிமையாளரான Warner Bros குழுமத்துடன் இணைந்து Jio Cinema இந்தியாவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது. WB குழுமத்திடம் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளாக The last of us, house of dragons, Chernobyl, white house plumbers, white lotus, mare of east town, winning time, Barry, succession, big little lies, west world, silicon valley, true detective, newsroom, game of thrones, entourage, curb your enthusiasm, Perry mason ஆகிய நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

Jio Cinemaவில் இப்போ உலகின் சிறந்த திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்க்கலாம்! ஐபில் 2023 போட்டிகளோடு நிற்கப்போவதில்லை!

ஏற்கனவே இந்தியாவில் முன்னணி OTT தளங்களான Amazon Prime Video, Disney+ Hotstar, Netflix ஆகிய நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாளராக மாறிவிட்டது. HBO Content என்றால் உலகளவில் மிகப்பெரிய மதிப்பு உள்ளது. இதன் மூலமாக Disney+ Hotstar போலவே உடனடியாக பயனர்களை ஜியோ சினிமா பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஐபில் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமையை ஜியோ நிறுவனத்திடம் இழந்த டிஸ்னி இப்போது HBO Content மற்றும் நிகழ்ச்சிகளையும் ஜியோ நிறுவனத்திடம் இழந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியாவின் நம்பர் 1 OTT தளமாக இருந்துவந்த Disney+ Hotstar சமீபகாலமாக பயனர்களை தொடர்ந்து இழந்துவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.