மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக இருப்பவர் பிரகலாத் ஜோஷி. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் இருந்தார் பிரகலாத் ஜோஷி. தற்போது மத்திய அமைச்சராக உள்ள பிரகலாத் ஜோஷி, கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்து சாமி தரிசனம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில் பிரகலாத் ஜோஷியின் இந்த வேண்டுதல் பேசு பொருளாகியுள்ளது. கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளுக்கும் கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
PTR Palanivel Thiagarajan: அதிமுகவில் இணையும் பிடிஆர்? ஜெயக்குமார் பரபரப்பு தகவல்!
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான குமாரசாமி பின்னடைவை சந்தித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்பட்டிருந்த நிலையில் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடந்து செல்கிறார் பிரகலாத் ஜோஷி. நடக்கவே முடியாமல் மூச்சு வாங்க ரொம்பவே கஷ்டப்பட்டு நடந்து செல்கிறார் பிரகலாத் ஜோஷி.
Priyanka Nalkari: நம்ம ரோஜாவா இது.. பட்டு சேலையில் கிறங்க வைக்கும் பிரியங்கா நல்கரி!
இந்த வீடியோவை பார்த்த வலைதள வாசிகள், கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் தனக்கே முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என்று பிரகலாத் ஜோஷி நடந்து சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறி வருகின்றனர். கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் பிரகலாத் ஜோஷிக்கு முதலமைச்சர் பதவி வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான குமாரசாமி கூறி இருந்தார்.
ஆனால் இதனை மறுத்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தனக்கு கர்நாடக முதல்வராகும் ஆசை இல்லை என்றும் பிரதமர் மோடிக்கு கீழ் நேரடியாகப் பணியாற்றவே விரும்புவதாக கூறியிருந்தார். மக்கள் மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் உள்ளவரை தான் மோடியின் கீழ் மத்திய அமைச்சரவை இருக்கவே விரும்புவதாகவும் கூறினார் பிரகலாத் ஜோஷி. பிரகலாத் ஜோஷி நான்காவது முறை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kasthuri: பாவாடை தாவணியில் படு க்யூட்டாக இருக்கும் கஸ்தூரி… அசந்து போகும் ரசிகர்கள்!