சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.
ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் இருந்து வெளியான வடிவேலுவின் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.
வடிவேலுவின் இந்த போஸ்டர் தற்போது ரஜினி, கமல், விஜய், அஜித் வெர்ஷனில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாமன்னன் வடிவேலு வெர்ஷனில் சூப்பர் ஸ்டார்ஸ்
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் தான் முதன்மையானதாக இருக்கும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
வடிவேலு தான் மாமன்னன் என்ற லீட் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த வடிவேலுவை, வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் முன்னணி ஹீரோக்களின் போஸ்டர்ஸ் வெளியாகும் போது, அதனை வடிவேலு வெர்ஷனில் ரீ-கிரியேட் செய்து மீம்ஸ்கள் வைரலாகும். ஆனால், மாமன்னன் விசயத்தில் இது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

இந்நிலையில், வடிவேலு துப்பாக்கியுடனும் உதயநிதி கையில் அரிவாளுடனும் நாற்காலிகளில் அமர்ந்திருப்பதை போல மாமன்னன் போஸ்டர் வெளியாகியிருந்தது. இந்த போஸ்டரில் வடிவேலு, உதயநிதி இருவருமே மிரட்டலான டெரர் லுக்கில் இருந்தனர். செம்ம மாஸ்ஸான இந்த போஸ்டரை நெட்டிசன்கள் ரீ-கிரியேட் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்த போஸ்டர்களில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இடம்பெற்றிருப்பது தான் சிறப்பே.

ஒரு போஸ்டரில் ரஜினி வடிவேலு லுக்கில் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்க, அவருடன் சிவகார்த்திகேயன் அரிவாளுடன் இருக்கிறார். வடிவேலுவை ரஜினியாகவும், உதயநிதியை சிவகார்த்திகேயனாகவும் மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள். அதேபோல், இன்னொரு போஸ்டரில் கமலும் சூர்யாவும் இடம்பெற்றுள்ளனர். வடிவேலுவுக்கு பதிலாக கமலும் உதயநிதிக்கு பதில் சூர்யாவையும் ரீ-கிரியேட் செய்துள்ளனர்.
இன்னொரு போஸ்டரில் வடிவேலுவின் டெரர் லுக்கில் விஜய்யும், உதயநிதிக்கு பதில் விஜய் சேதுபதியும் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக மாமன்னன் வடிவேலு லுக்கில் விஜய்யும், உதயநிதியை போல சிம்புவும் இருக்கும் ஒரு போஸ்டர் நேற்று வெளியாகி வைரலாகியிருந்தது. அதில், விஜய் கையில் துப்பாக்கியும், சிம்பு கையில் நீளமான வாளும் இருப்பதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இன்னொரு போஸ்டரில் அஜித்தும் சிம்புவும் மாமன்னன் ஃபேன்மேட் போஸ்டரில் மாஸ் காட்டி வருகின்றனர். வடிவேலுவின் வேட்டி, சட்டை லுக்கில் அஜித் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் கையில் நீளமான அரிவாளுடன் வெறித்தமாக அமர்ந்திருக்கிறார் சிம்பு. இந்த போஸ்டர்கள் மாமன்னன் படத்திற்கு தரமான ப்ரோமோஷனாக அமைந்துள்ளது.