வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்:அமெரிக்கா மற்றும் கனடாவில், 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது.
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள தி கேரளா ஸ்டோரி படம், கடந்த 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது.
கேரளாவைச் சேர்ந்த ஹிந்து, கிறிஸ்துவ பெண்கள், இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத தடை உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடான கனடாவில், 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில், தி கேரளா ஸ்டோரி படம் நேற்று திரையிடப்பட்டது.
இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர்களிடம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இயக்குனர் சுதிப்தோ சென் கூறியதாவது:
தி கேரளா ஸ்டோரி படம், சினிமாவின் ஆக்கப்பூர்வமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பணி. இது, உலகம் முழுதும் உள்ள மக்களை சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement