தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தயாரிப்பு ஆலை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சுமார் ரூ.1000 கோடி வரை முதலீடு செய்ய உள்ளது.
ஐசர் மோட்டாரின் கீழ் செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு 2022-2023 நிதியாண்டில் 8,34,895 மோட்டார்சைக்கிள்களை, முந்தைய FY22-ல் 6,02,268 யூனிட்களில் இருந்து 38.4 சதவீதம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. மேலும், சர்வதேச சந்தைகள் 1 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
Royal Enfield EV Plan
ஜசர் தலைவர் சித்தார்த் லால் கூறுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கிய நகர்வு வேகம் கூடிக்கொண்டிருக்கின்ற வேளையில், குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் ICE என்ஜின் பெற்ற வாகனங்ள் இருக்கும்.
EV வாகனங்ளுக்கு இரவு பகல் பாராமல் உழைக்கின்றோம். நாங்கள் சோர்வடையவில்லை , EV மேம்பாட்டில் அசுரத்தனமான வேகம் உள்ளது. எங்கள் சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறை உலகின் சிறந்ததை விட சிறந்ததாக இருப்பதால், எங்கள் இவி மாடலுக்கு விற்பனைக்கு வர அதிக காலம் எடுக்கும். நாங்கள் அதிக நேரத்தையும் எடுத்துக்கொள்கிறோம்.” எனவும் குறிப்பிட்டார்.
ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி ஆர் கோவிந்தராஜன் கூறுகையில், “வரும் ஆண்டுகளில் புதிய வரிசையின் மூலம் நாங்கள் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய சிந்திக்கிறோம். எங்கள் தயாரிப்புகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவோம், மேலும் வாடிக்கையாளர்கள் எதைத் தேடுகிறார்களோ அதற்கு ஏற்ற மாடல்களை அதிக கவனம் செலுத்துகிறோம். சிறந்த மோட்டார் சைக்கிள் அனுபவத்தை வழங்கவும், மேலும் ஆடைகள், ஆக்செரிஸ் மற்றும் சமூகக் கட்டமைப்பில் எப்போதும் கவனம் செலுத்தப்படுகிறது.