‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. கோலிவுட் சினிமா அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து மீண்டும் விஜய் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவலகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த பொங்கலுக்கு வெளியான ‘வாரிசு’ படத்தினை வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்தார். தமிழ், தெலுங்கு மொழயில் ரிலீசான இந்தப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்து வெளியான ‘வாரிசு’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மேலும், ‘வாரிசு’ படம் சீரியல் போல் க்ரிஞ்சாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படமான லியோவில் நடித்து வருகிறார் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப்படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வந்தது.
‘லியோ’ படப்பிடிப்பே இன்னமும் நிறைவடையாத நிலையில் விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ‘தளபதி 68’ படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து மீண்டும் விஜய் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
Actor Saravanan: ‘பருத்திவீரன்’ சரவணன் மீது பரபரப்பு புகார்: பகீர் கிளப்பிய மனைவி.!
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது ‘கஸ்டடி’ படத்தில் நாக சைதன்யா படத்தில் நடித்துள்ளார். 19 வயதான கீர்த்தி ஷெட்டி சூர்யா ஜோடியாக ‘வணங்கான்’ படத்தில் நடிக்கவிருந்தார். இந்தப்படத்திலிருந்து சூர்யா விலகியதை தொடர்ந்து கீர்த்தியும் வெளியேறினார். இதனிடையில் தற்போது இவர் விஜய் ஜோடியாக நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
‘கஸ்டடி’ படத்தின் புரமோஷனின் போது கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என தெரிவித்திருந்தார். மேலும், திரிஷா தனது ரோல் மாடல் என்றும் கூறியிருந்தார். ‘லியோ’ படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், திரிஷா இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sneha: வதந்திகள் தவிடு பொடியாகட்டும்.. திருமண நாளில் பிரசன்னா வெளியிட்ட பதிவு.!