கர்நாடகாவில்
ஆட்சியை பிடித்துள்ள நிலையில் பாஜகவின் தோல்வி தேவையானது தான் என்று அரசியல் விமர்சகரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ் கூறியுள்ளார். இது பாஜக ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம், மாரிதாஸ் பேசியுள்ள வீடியோவில் தமிழகத்தில் தேவையில்லாத பில்டப் அரசியல் செய்துகொண்டிருக்கும் பாஜகவினரை அவர் வெளுத்து வாங்கியுள்ளார்.
கர்நாடகா தேர்தலை முன்னிட்டு அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக டெல்லி பாஜக நியமித்தது. இவருக்கு 86 தொகுதிகளை கொடுத்து வியூகங்களை அமைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. இதனை இங்குள்ள பாஜகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். கர்நாடகாவில் ஒரு கை பார்த்துவிட்டு அப்படியே தமிழகத்தில் பாஜகவை வெற்றி பெற வைக்க போகிறார் என்று அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் பயங்கர பில்டப் கொடுத்து சமூக வலைத்தளங்களில் ட்வீட், போஸ்ட் பகிந்து வந்தனர்.
இதற்கு மத்தியில் பாஜகவை சேர்ந்த ஒருவர் டிவிட்டரில் எழுப்பிய கேள்வி பகீர் கிளப்பியது. அந்த ட்வீட்டில்,
‘ பணி நிமித்தமாக பெங்களூரு செல்ல நேர்ந்தது. அங்குள்ள மக்கள் தலைவர் அண்ணாமலையை மிகப்பெரும் சக்தியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரும்பாலும் ஓட்டு பதிவு முடிந்தவுடன் தலைவர் அண்ணாமலை முதல்வராக வாய்ப்பு அதிகம்… தமிழ்நாட்டு பாஜக அண்ணாமையை முதல்வராக பார்க்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாநில முதல்வராக இருப்பது சாத்தியமா? சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்” என்று அதில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் வராமல் மாறாக அந்த நபரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் பாஜக படுதோல்வி சந்தித்துள்ளது. இந்த தோல்வி பாஜகவுக்கு தேவையானதுதான் என்று மாரிதாஸ் கூறியுள்ளார்.
மாரிதாஸ் அந்த வீடியோவில், ஜனநாயக அடிப்படையில் எந்த முடிவு வந்தாலும் அரசியல் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். என்ன ஆனாலும் சரி, மோடியும், அமித் ஷாவும் பார்த்துக்கொள்வார்கள் என்று இங்குள்ளவர்கள் ஓவர் பில்டப்பு செய்து வருகின்றனர். இதுபோன்ற பில்டப் கீழ்த்தமானது. பெங்களூருவில் இருக்கிறவர்கள் கூட இந்த அளவுக்கு பில்டப் கொடுக்கவில்லை..
ஆனால், இங்க இருக்கிறவர்கள் பேசுகிற பேச்சு தாங்க முடியவில்லை.. எந்த அடிப்படையில் இரண்டு மாநிலத்துக்கும் ஒரே முதல்வர் இருக்க முடியுமா என்று கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.. தமிழ்நாட்டிலும் ஆட்சியை பிடித்துவிடுவார்கள் போல, கர்நாடகாவிலும் ஆட்சியை பிடித்துவிடுவார்கள் போல இருக்கிறது இவர்கள் பேசுகிற பேச்சு… ஒரு கள அரசியலே தெரியாமல் கண்மூடித்தனமாக பில்டப் செய்வது மிகவும் ஆபத்து.. ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகவே ஆகாது என கூறியுள்ளார்