அமெரிக்கா: அன்பு கணவனுக்கு வோட்காவில் விஷம்.. கணவன் இறந்த மறுநாள் பார்ட்டி கொடுத்த மனைவி.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
வோட்காவில் விஷ மாத்திரைகளை கலந்து கணவனை கொன்ற பின், பார்ட்டி கொடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன்

அமெரிக்காவில் மலை பிரதேச நகரமான பார்க் சிட்டி அருகே உடா பகுதியைச் சேர்ந்தவர் கவுரி டார்டன் ரிசின்ஸ். இவரது கணவர் எரிக் ரிசின்ஸ். இருவரும் அந்த மலைப் பிரதேச நகரத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன் மற்றும் மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தசூழலில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி கணவன் உயிரிழந்துள்ளார். அதையடுத்து முன்று குழந்தைகளுடன் மனைவி தனியாக வசித்து வந்துள்ளார். இந்த கால கட்டத்தில் மனதிற்கு பிடித்த மனிதர்களை இழந்த பின்னரும், நம்பிக்கையை இழக்காமல் வாழ்வது எப்படி என்ற புத்தகத்தை மனைவி டார்டன் எழுதியுள்ளார். குழந்தைகள் இலக்கியமான இந்த புத்தகம் அமோகமான விற்பனை ஆனது. உறவின் உன்னதங்களையும், அடிப்படை வாழ்வின் பிரச்சனைகளையும் திறம்பட கையாண்டு சிறப்பாக வாழ்வது எப்படி என அந்த புத்தகத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மனைவி டார்டனை கடந்த வாரம் அமெரிக்க போலீசார் கைது செய்தனர். கணவனை கொன்று பின்னர் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த வழக்கில் போலீசார் அவரை கைது செய்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடப்பதற்கு முன்னர் அதாவது கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலில் இருந்த மனைவி கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

அதையடுத்து வந்த நாட்களின் கணவனிடையே வழக்கம் போல் பேசி வந்துள்ளார். ஆனால் வழக்கத்தை விட காதல் ரசம் சொட்டும் வார்த்தைகளால் கணவனை மதிமயங்கச் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வோட்கா அருந்தி காதலை கொண்டாடி உள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கணவன் வேண்டாம் என்று சொன்னாலும் அவருக்கு வோட்காவை கொடுத்து வந்துள்ளார் மனைவி டார்டன். இந்தநிலையில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி வோட்கா அருந்திய கணவன், மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்ததை கண்டு போலீசாருக்கு மனைவி தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கணவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் கணவன் எரிக் ரிசின்ஸ் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். கடந்த ஓராண்டு காலமாக நடந்த விசாரணையில், வோட்காவில் விஷ மாத்திரைகளை கலந்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

இந்த விஷ மாத்திரைகள் உடனடியாக உயிர் எடுப்பதற்கு பதிலாக ஸ்லோ பாய்சன் எனக்கூறப்படும் வகையில், மெல்ல மெல்ல உயிரை கொல்லும் மாத்திரைகளாகும். வோட்காவில் தினமும் இந்த விஷ மாத்திரைகளை மனைவி டார்டன் கலந்து கொடுத்தது தெரியவந்தது. மேலும் கணவன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அடுத்தநாள், தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் மனைவி என்பது அம்பலமானது. அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.