பிரபல பாலிவுட் நடிகையான பரினீதி சோப்ராவிற்கும், ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகவ் சத்தாவும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
பரினிதி- ராகவ் நிச்சயதார்த்தம்
இந்திய சினிமாவில் பாலிவுட் திரையுலகில் நடிகையாகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் பரினீதி சோப்ரா.
இவரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியுமான ராகவ் சத்தாவும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் விரைவில் திருமணம், செய்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் பரினீதி மற்றும் ராகவ் சத்தாவின் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி டெல்லியில் உள்ள கபுர்தலா இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்த நிகவில் தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதனை ப்ரினீதி சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இருவரும் கை கோர்த்து கொண்டு இருப்பதை போன்ற புகைப்படத்தை பதிவிட்டு ’இதற்காகத்தான் நான் இத்தனை நாள் வேண்டினேன்’ என தனது பதிவிற்கு கீழே அழகான கேப்ஷனை எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த தம்பதியினர் பல அரசியல் தலைவர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் வாழ்த்தி வருகின்றனர்.