அவளை கொன்றுவிட்டேன்.. என்னை நானே கொல்லப்போகிறேன்! பேஸ்புக் நேரலையில் இளைஞரின் அதிர்ச்சி செயல்


இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் காதலியை கொலை செய்த பின்னர் இளைஞர் ஒருவர், தன்னைத் தானே பேஸ்புக் நேரலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேஸ்புக் நேரலை

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் அங்கித் அஹிர். இவர் பேஸ்புக் நேரலையில் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தன்னுடைய காதலியை சுட்டுக் கொன்றதாக கூறிய அங்கித் அஹிர், பின்னர் என்னை நானே கொல்லப் போகிறேன் என்று அதிர்ச்சி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் கூறியபடியே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவளை கொன்றுவிட்டேன்.. என்னை நானே கொல்லப்போகிறேன்! பேஸ்புக் நேரலையில் இளைஞரின் அதிர்ச்சி செயல் | Youth Shot Suicide Facebook Live After Kills Lover Representative image

உடலைக் கைப்பற்றிய பொலிஸார்

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக அங்கித் இருந்த இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் நிவேதிதா (20) என்ற பெண்ணும் அங்கித்தும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களது காதல் நிவேதிதாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அங்கித்துடன் பேசுவதை நிவேதிதா நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

பீகாரின் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதிதா, ராஞ்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளார்.

அவளை கொன்றுவிட்டேன்.. என்னை நானே கொல்லப்போகிறேன்! பேஸ்புக் நேரலையில் இளைஞரின் அதிர்ச்சி செயல் | Youth Shot Suicide Facebook Live After Kills Lover Express Photo

தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டதால் மனமுடைந்த அங்கித் ராஞ்சிக்கு வந்த நிவேதிதாவை சுட்டுக் கொன்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.