உக்ரைன் நகரின் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஆயுத கிடங்கு வெடித்து சிதறி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆயுத கிடங்கை குறி வைத்து தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரான க்மெல்னிட்ஸ்கியில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து 21 ட்ரோன்களை அனுப்பியது.
@ap
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் திட்டப்படி, ஆயுத கிடங்கை ஒழிக்க நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
@reuters
சரியாக மே 12ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஆயுத கிடங்கு வெடித்து மாபெரும் தீ பந்து கிளம்பியது. இதில் அருகிலிருந்த 30 பேருக்கும் மேல் படுகாயமடைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
இதனை தொடர்ந்து ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட வெடிப்பில், அருகிலிருந்த கட்டிடங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
மேலும் ரஷ்யாவின் 17 ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Ukrainian city of Khmelnytskyi rocked by huge explosion after Russia sends 21 drones to army missile silo causing enormous fireball which ‘injured 30 people’ https://t.co/v4Z8S7QLWW pic.twitter.com/XWhWF9YXoc
— Karli Bonne’ (@KarliBonnita) May 14, 2023
’திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ராணுவத்தினர் 21 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இரண்டு பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். ’ என க்மெல்னிட்ஸ்கி நகரைச் சேர்ந்த ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவம் வேறு வேறு திசைகளிலிருந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் உக்ரைன் ராணுவத்தால் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தமுடியவில்லை எனவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.