ஸ்வீடன் நாட்டில் பிரித்தானிய படைவீரர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரித்தானிய படைவீரர்
பிரித்தானியாவைச் சேர்ந்த 25 வயதான படைவீரர் ஒருவர், ஏப்ரல் 17 மற்றும் மே 11க்கு இடையில் ஸ்வீடனில் நடந்த அரோரா 23 தற்காப்பு பயிற்சிக்காக HMS ஆல்பியன் கப்பலில் இருந்தார்.
ஸ்வீடிஷ் வெளியீடான Expressionயின் படி, குறித்த வீரர் பல ஸ்வீடன்களுடன் சேர்ந்து ஸ்டாக்ஹோம் நகர மையத்தின் வடமேற்கே உள்ள சோல்னாவில் உள்ள ஒரு வீட்டில் தங்கவிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பாக சக பிரித்தானிய சேவையாளருடன் இரவில் வெளியே சென்றிருந்தார்.
அதன் பின்னர் அவர் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி, சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள்
இதில் அவருடன் வெளியே இருந்த பிரித்தானிய சேவையாளரும் அடங்குவார். மற்ற மூவரும் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனினும், அன்றைய இரவு என்ன நடந்தது என்பது குறித்து ஸ்வீடிஷ் அதிகாரிகள் கூடுதல் விவரங்களுக்கு செல்லவில்லை.
பொலிஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
அரோரா 23 என்பது 30 ஆண்டுகளாக பாரிய தேசிய பயிற்சி என ஸ்வீடிஷ் ஆயுதப்படை கூறியது. The RAF மற்றும் பிரித்தானிய ராணுவமும் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.
மேலும், மூன்று வார பயிற்சியில் ஸ்வீடிஷ் ராணுவம், ஸ்வீடிஷ் கடற்படை, ஸ்வீடிஷ் விமானப்படை, ஊர்க்காவல்படை மற்றும் 14 நாடுகளைச் சேர்ந்த 26,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image for representation