கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 135 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்
லிங்காயத்துகள்:
காங்கிரஸ் 45
பாஜக- 20
மஜத-2
சுயேட்சை-1
கேஆர்பிபி-1
ஒக்கலிகா கவுடா:
காங்கிரஸ்- 27
மஜத-12
பாஜக-10
சுயேட்சை-1
எஸ்கேபி-1
எஸ்டி:
காங்கிரஸ்-14
மஜத-1
எஸ்சி (தலித்துகள்)
காங்கிரஸ் 22
பாஜக 12
மஜத-3
குருபா
காங்கிரஸ்- 8
பாஜக-3
முஸ்லிம்கள்
காங்கிரஸ் 9
பிராமணர்கள்
பாஜக- 6
காங்கிரஸ் 3
மஜத-1
மராத்தாக்கள்
காங்கிரஸ்-4
பாஜக-2
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சித்தராமையா பேசும் போது, ”மக்களுக்கு 5 முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். அந்த 5 வாக்குறுதிகளையும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றுவோம். நாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மோடி கூறினார். 100 முறை மோடி கர்நாடகத்திற்கு வந்தாலும் பாரதிய ஜனதா வெற்றி பெறாது”என்றார்.
காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு புட்டசுவாமி கவுடா என்ற சுயேட்சை வேட்பாளர் ஆதரவு கொடுத்து இருப்பதாகவும் இதனால், தற்போது ஆதரவு 138 ஆக உயர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
தேசத்திற்கு கொண்டாட்டத்தை பரிசளித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகள் என்று வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் வெங்கடேசன் எம்.பி கூறுகையில், “ஜனநாயத்தின் எதிரிகள் ஜனநாயகத்தாலே வீழ்த்தப்படும் பொழுது அது கட்சிகளை கடந்து தேசமே கொண்டாடும் வெற்றியாக மாறுகிறது. தேசத்திற்கு கொண்டாட்டத்தை பரிசளித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக கட்சியின் மேலிட தலைவர்கள் வருகை தர உள்ளனர். முதல்வர் பதவியேற்பு விழா அடுத்த வாரம் 17 அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசாமல் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் முயற்சிகள் இனி பலனளிக்காது என்பதை கர்நாடகா தேர்தல் வெற்றி காட்டுகிறது. இமாசல பிரதேசம், கர்நாடாவில் இதை பார்த்தோம். தங்களின் பிரச்சினைகளை விவாதித்து அதற்கு தீர்வு காணப்பட் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா