கர்நாடகாவில் அண்ணாமலை ரிசல்ட் இதுதான்… பாஜகவிற்கு விழுந்த சரியான அடி!

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. பாஜகவை வெல்ல முடியாது என்ற பிம்பத்தை உடைத்து மற்ற கட்சிகளுக்கு ஒரு பாடத்தை அளித்துள்ளது. பலரும் கூறுவது போல, இது 2024 மக்களவை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும் இருக்கலாம். கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 136 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடிக்கிறது.

எதிர்க்கட்சி வரிசையில் பாஜக

65 இடங்களுடன் பாஜக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. கர்நாடக தேர்தலில் உள்ளூர் தலைவர்களுக்கு மதிப்பளிக்காமல் தேசிய தலைமை நடந்து கொண்டது பாஜகவின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமித்ததை சுட்டிக் காட்டுகின்றனர்.

அண்ணாமலை பிரச்சாரம்

இவருக்கு மட்டும் 10 மாவட்டங்களில் 86 சட்டமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டன. அதில் நேரில் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் முடிவுகள் எப்படி வந்திருக்கின்றன என்று இங்கே அலசலாம்.

பாஜக வெற்றி சதவீதம்

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பாஜக 35, காங்கிரஸ் 42, மதச்சார்பற்ற ஜனதா தளம் 8, சர்வோதய கர்நாடக பக்‌ஷா 1 என வெற்றி பெற்றுள்ளன. இதில் காங்கிரஸின் ஆதிக்கமே அதிகம் இருப்பது தெரியவருகிறது. பாஜக பாதிக்கும் கீழ் தோல்வியை தழுவியிருக்கிறது. அண்ணாமலை பிரச்சாரம் செய்த தொகுதிகளில் பாஜகவின் வெற்றி என்பது 40.69 சதவீதமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.