கர்நாடகா தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமா? காங்கிரஸ் போடும் கணக்கு!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தேசிய அரசியலில் கடந்த ஓரிரு மாதங்களாக கர்நாடக தேர்தல் விவகாரம் தான் பேசுபொருளாக இருந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருந்தாலும் தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர வேறு மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இல்லை. எனவே மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க முயற்சி மேற்கொண்டது.

பிரதமர் மோடி டெல்லிக்கும் பெங்களூருக்கும் அடிக்கடி விமானத்தில் பறந்து கர்நாடகா முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கர்நாடகத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்தி தென்னிந்தியாவில் இருந்து அக்கட்சியின் ஆட்சியை அப்புறப்படுத்தவும், மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி இந்தியாவிலிருந்தும் அக்கட்சியின் ஆட்சியை அப்புறப்படுத்தவும்
காங்கிரஸ்
முயற்சித்தது. முதல் இலக்கை தற்போது எட்டிப்பிடித்துவிடும் நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

உதயச்சந்திரன் இடத்தில் புதிய அதிகாரி? கோட்டையில் நடக்கும் மிகப் பெரிய மாற்றம்!

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்கள் பெற்றால் ஒரு கட்சி பெரும்பான்மை மாறும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 70 இடங்களிலும், மஜக 30 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

கர்நாடகாவில் சுமார் 130 தொகுதிகள் கிராமப்புறங்களில் தான் உள்ளன. கடந்த முறை பாஜக கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்த முறை கிராமப்புற வாக்காளர்கள் பாஜகவை கைவிட்டு காங்கிரஸ் கரத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

கர்நாடக கிராமப்புற மக்களின் மனநிலையை இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மக்களும் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிப்பார்கள் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

பிடிஆருக்கு இவ்வளவு ஆதரவா? முடிவை மாற்றும் ஸ்டாலின்? இனி தான் ஆட்டமே இருக்கு!

ஆனால் கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே சமயம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அங்கு பரவலாக பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகளின் சராசரி அளவை பிரதிபலிக்கும் வகையில் முன்னிலை விவரங்கள் உள்ளன. முடிவுகளும் அவ்வாறே இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.